
என்னை மறந்து விடு
என்று மட்டும் சொல்லாதே
மடிந்து விடு
என்று சொல்...!
என்னை இழந்து விடு
என்று மட்டும் சொல்லாதே
இறந்து விடு
என்று சொல்...!
என்னை பிரிந்து விடு
என்று மட்டும் சொல்லாதே
உயிரே பிரிந்து விடு
என்று சொல்...!
என் நினைவை அழித்து விடு
என்று மட்டும் சொல்லாதே
அழிந்து விடு
என்று சொல்...!
மறப்பது உனக்கு சுலபம்
உனக்காய் இறப்பது
எனக்கு சுலபம்...!
இறந்தாலும் இறக்காமல்
எனக்குள் உறங்கிக் கிடக்கும்
உன் ஞாபகங்கள்...!
0 comments:
Post a Comment